பசுக்களுக்கு 50 கோடியில் ஆதார் திட்டம்...வீடியோ

  • 6 years ago
பசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ரூ.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகளை செல்லாக்காசு போல புறக்கணித்த போதிலும், இதுபோன்ற புரட்சிகர திட்டம் (!) குறித்த தகவலால், புழகாங்கிதம் அடைந்துள்ளனர் பாஜக ஆதரவு மிடில் கிளாஸ் வர்க்கம் என்கிறது டெல்லி வட்டாரம்! சம்பளம் வாங்கும் மனிதனுக்கு வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் செய்யாததை, பசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.50 கோடியை வாரி இறைத்த, இந்த ஒற்றை அறிவிப்பு மறக்கடித்து, மக்களை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்துள்ளது என பாஜக தலைவர்கள் வரிசையாக டிவி சேனல்களுக்கு போன் போட்டு பேட்டி கொடுத்தாலும் கொடுக்கலாம்.

இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது.

BJP government is set to assign each of the country’s milk-producing cows a unique identity card or UID.

Aadhaar Card For Cow | BJP government | Modi Plan|

Recommended