தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது -சுப்பிரமணியன் சாமி - பரபர பேட்டி- வீடியோ

  • 6 years ago
சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருக்கிறது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளனர். அடுத்ததாக விஷாலும் தனிக் கட்சி துவங்கும் யோசனையில் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி வந்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமானால் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். ஆனால் காவிரி நீர் கிடைக்காது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கொடுக்கலாம். இது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியாதா?என்னிடம் தீர்வு கேட்டால் இஸ்ரேலில் இருந்து எந்திரத்தை வரவழைத்து கடற்கரையில் வைத்தால் நீர் பிரச்சனையே இருக்காது. இந்த திட்டத்தை 4 மாதங்களில் செயல்படுத்த முடியும்.


BJP leader Subramanian Swamy said in an interview that TN is going in wrong direction because of the madness over film stars. He said so at a time Rajinikanth and Kamal Haasan are about to float new parties in the state.

Recommended