சந்திரகிரகணத்தின் பொது ஏலியன் கடந்து சென்றதா ? | Oneindia Tamil

  • 6 years ago
சந்திர கிரகணத்தின்போது வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்து சந்திரனின் விளையாட்டை கண்டுமகிழ்ந்தனர்.

பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. பொதுமக்களாகிய நாம் வெறும் சந்திர கிரணகத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்தோம். ஆனால் விஞ்ஞானிகளின் பார்வையோ வேறு.

Some Unidentified Flying Object passes in the sky when Lunar Eclipse happens on January 31st. Researchers suspects that that may be alien's flying object.

Recommended