குற்றாலத்தில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

  • 6 years ago
குற்றாலத்தில் கோவில் வாசல் அருகே 4 கடைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் 4 கடைகளில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அருவிகளின் நகரம் என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் போது அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். இந்த ஆண்டு சீசன் காலம் முடிந்தும் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருந்தது. டிசம்பர் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இப்போது தண்ணீர் குறைந்து வெறும் பாறைகள் மட்டுமே உள்ளது. எனினும் குற்றாலநாதரை தரிசிக்க மக்கள் வந்து செல்கின்றனர்.

குற்றாலம் அருவிக்கரை அருகே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் இல்லை என்றாலும் சுற்றுலா பயணிகளுக்காக கடைகள் திறக்கப்படுவது வழக்கம். சுவாமி சன்னதி பஜாரில் பல கடைகளில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை பூட்டியிருந்த கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தென்காசி மற்றும் செங்கோட்டையில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.

Rs 5 lakh worth muligai were gutted in a fire in Courtallam.

Recommended