தமன்னா மீது செருப்பு வீச்சு ஆந்திராவில் அதிர்ச்சி- வீடியோ
  • 6 years ago
நல்ல படத்தில் நடிக்கவில்லை என நடிகை தமன்னா மீது ரசிகர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் நகை கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை தமன்னா பங்கேற்றார். அவரை காண ரசிகர் திரண்ட நிலையில் கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் தமனா மீது தனது செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு தமனா மீது படாமல் அவர் அருகில் சென்று விழுந்தது. இதையடுத்து தமனா கடைக்குள் அழைத்துசெல்லப்பட்டார்

இதையடுத்து தமன்னா மீது செருப்பை வீசிய ரசிகரை தாக்கிய மற்ற ரசிகர்கள் போலிசாரிடம் ஒப்படைத்தனர் போலீசார் நடத்திய விசாரனையில் தமன்னா மீது செருப்பை வீசிய நபர் முஷிராபாத்தை சேர்ந்த கலிம்முல்லா என்பதும் தமன்னாவின் தீவிர ரசிகர் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படத்தில் தமன்னா நடிக்கவில்லை என்ற கோபத்தில் அடித்ததாக கூறியுள்ளார் . இருப்பினும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் பவன் கல்யான் மீது ரசிகர் செருப்பை வீசி தாக்கிய நிலையில் இன்று மீண்டும் நடிகை தமன்னா மீது ரசிகர் செருப்பை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Des : Actress Tamanna has been hit by a fan slippage
Recommended