விஜய் சேதுபதி காட்டுல அடைமழை

  • 6 years ago
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு கையில் அதிகப் படங்களை வைத்திருக்கும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. அவர் நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த வருடம் பல படங்கள் ஷூட்டிங்கு காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு இறுதி வரை அவரது படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன. இவையில்லாமல் பல புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் விஜய் சேதுபதியிடம் தொடர்ந்து கதை சொல்லி வருகிறார்களாம். இன்னும் படங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2019 வரை விஜய் சேதுபதி மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள். மேடைக்கு மேடை விழாக்களில் பல பொதுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் விஜய் சேதுபதி தனது படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் வெகு ஆர்வத்தோடு கலந்துகொண்டும் வருபவர்.

Vijay Sethupathi, lead actor who has more films this year inTamil film industry. The movie 'Oru nalla naal paathu solren' will be released on February 2. Many films are waiting for this year. His films are lined up to the end of next year.

Recommended