கிறிஸ் கெய்லை வாங்க ஆளில்லை.. ஷிகர் தவானை "ஆர்டிஎம்" போட்டு மீண்டும் கட்டித் தூக்கியது ஹைதராபாத்!

  • 6 years ago
அதிரடி வீரர் கிறிஸ்கெய்லை வாங்க எந்த அணியும் தயாரில்லை. அதேநேரம், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். பெங்களூர் அணிக்காக ஆடிய கெய்ல், கடந்த சீசனில் சொதப்பி தள்ளினார். இதனால் இவ்வாண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த ஆண்டின் காஸ்ட்லி வீரர் என்ற பெருமையை பெற்ற பென் ஸ்டோக்சை இவ்வாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியது. இவ்வாண்டு ஏலத்தில் முதல் வீரராக ரூ.10 கோடி அளவை தாண்டி சாதித்தது பென் ஸ்டோக்ஸ்தான்.

ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவான் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 5.25 கோடிக்கு இவர் ஏலம் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவான் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 5.25 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஹைதராபாத் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. சென்று வருடமும் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended