டிராபிக் ராமசாமி நலமுடன் இருக்கிறார்- வீடியோ

  • 6 years ago
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நலமுடன் இருக்கிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர் அமீர் தயாரிக்கும் அச்சமில்லை அச்சமில்லை பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி நலமுடன் பங்கேற்றார். ஒற்றை மனிதராக அரசுகளை அலறவிட்டு வருபவர் டிராபிக் ராமசாமி. அரசுகளுக்கு எதிராக ஓயாத போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். கடந்த சில நாட்களாக டிராபிக் ராமசாமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது; உச்சகட்டமாக மனச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறார் என செய்திகள், வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டிராபிக் ராமசாமி நலமுடன் இருப்பதாக கூறி தம்மோடு அமீரின் அச்சமில்லை அச்சமில்லை படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி கலந்து கொண்ட படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

Rumours that Social Activist Traffic Ramaswamy is not well. He is well and attendend Cinema Function on Wednesday in Chennai.

Recommended