மாத சம்பளம் பெறுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி- வீடியோ

  • 6 years ago
வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், மாத சம்பளம் வாங்குவோருக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. பழைய நடைமுறையான நிலையான கழிவு (Standard deduction) திட்டத்தை மீண்டும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கொண்டுவருவார் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது நாள் வரை பொருளாதார சீர் திருத்தம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதக்கியதற்கு பரிகாரமாக மத்திய அரசு சில கவர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சி, இலவச திட்டங்கள் அறிவிக்கப்படாது என பிரதமர் மோடி கூறியிருந்தாலும், சர்ப்ரைசாக அதை அறிவித்து தங்கள் வாக்கு வங்கியான நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களை குஷிப்படுத்தவே பாஜக நினைக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

இந்தியாவில் 70 சதவீத வருமான வரி மாத சம்பளம் பெறுவோரிடமிருந்தே வருகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் வரியில் இருந்து தப்பி வந்தாலும், ஜிஎஸ்டி மூலம், அவர்கள் பரிவர்த்தனை கண்காணிக்கப்படுவதால் இனி எளிதில், தப்ப முடியாது. ஆனால், அவர்களுக்கு வரி விலக்கு தொடர்பாக நிறைய சலுகைகள் உள்ளன. ஆனால், மாத ஊதியம் பெறுவோர் முதலீடு சார்ந்த திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1,50,000 வரை மட்டுமே வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ செலவுகளுக்கு ரூ.15,000 மட்டுமே விலக்கு உள்ளது.

The Centre is probably working on some Budget cheer for India's salaried class. A possible tweak in salary structure could be on cards, which could see standard deduction coming in as a tax-free expense to employees.

Recommended