ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து அலறிய ரசிகர்கள்

  • 6 years ago
நடிகை ராதிகா ஆப்தே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
மேலும், படங்களில் வெறும் பாடலுக்கு மட்டும் நடனமாடி செல்லும் கதாநாயகியாக இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் தான் இவர் நடிப்பார். சினிமா உலகில் நடிக்கத் தெரிந்த நடிகை லிஸ்டில் இவரது பெயரும் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். இப்படம் பார்க்கவே மிகவும் பயங்கரமாக உள்ளது. இந்த பல்லி செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பல்லியுடன் போஸ் கொடுத்த ராதிகா ஆப்தேவை பார்த்து அலறியிருக்கிறார்கள் ரசிகர்கள். அக்‌ஷய் குமார் நடிக்கும் 'பேடு மேன்' படத்தின் ஷூட்டிங்கின்போது இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே. 'பேடு மேன்' படத்தில் அக்‌ஷய் குமாருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Recommended