பட்ஜெட் 2018 : ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 8 கேமராக்கள் வரை பொறுத்த முடிவு

  • 6 years ago
நாட்டில் உள்ள 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு 2018 -19 பட்ஜெட் தாக்கலின்போது வெளியாக உள்ளது. பிப்ரவாி 1ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் ரயில்வே துறையில் பாதுகாப்புகளை அதிகாிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள ரயில் நிலையங்கள் பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன. தலைநகரின் நடுவில் அமைந்துள்ள நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலையில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் சுவாதியை கொன்றது யார் என்பது பற்றி கண்டுபிடிக்க கடும் சிரமம் ஏற்பட்டது. இதுபோல ரயில்களில் திருட்டுக்கள் நடைபெறுவதும், குற்றங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகிறது. சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டால் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் சுமாா் 395 ரயில் நிலையங்களிலும், 50 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 8 கேமராக்கள் வரை பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Indian Railways is pitching for the procurement of about 12 lakh CCTV cameras to ensure state-of-the-art surveillance systems in all trains and stations across the country. The Railways will make a provision of around Rs 3,000 crore in its budget for 2018-19 to install CCTV systems in all 11,000 trains

Recommended