அலறும் விஜய் ரசிகர்கள்... ஆறுதல் முருகதாஸ்!

  • 6 years ago
விஜய் இப்போது முருகதாஸுடன் இணைந்துள்ளார் அல்லவா... இந்தப் படத்தில் விஜய் மீனவராக நடிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. அதுவும் இரட்டை வேடமாம். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அச்சம். மீனவ வேஷம் அலர்ஜியாச்சே... இன்னொரு சுறான்னு கிண்டலடிப்பாங்களே... என்று. அதற்கேற்ப, சுறாவை வெளியிட்ட சன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர். ஆனால் அவர்களுக்கு பெரும் ஆறுதல் முருகதாஸ்தான். காரணம் தளபதியின் கேரியர் கிராப்பை மாற்றியமைத்த துப்பாக்கி, கத்தியைத் தந்தவர் அல்லவா... வெயிட் பண்ணுங்க பிரதர்ஸ்... முருகதாஸ் அப்படிலாம் ஏப்ப சாப்பையா எடுக்கமாட்டார். தளபதிக்கு இன்னொரு மெர்சல் வெற்றியாகவும் அமையலாம்!


Vijay fans feared after leaked an infor about vijay's next film based on fisherman subject.

Recommended