போக்கிரி படத்தை பிளாப் என்று கூறி ரசிகர்களிடையே சண்டை மூட்டி விட்ட ராம்கோபால் வர்மா

  • 6 years ago
போக்கிரி படம் பிளாப் என்று சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் தனது மகன் ஆகாஷை ஹீரோவாக்கியுள்ளார். அவர் தனது மகன் ஆகாஷை வைத்து மெஹ்பூபா என்ற படத்தை இயக்கி வருகிறார். 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்த காலத்தில் நடந்த காதல் கதை தான் மெஹ்பூபா.

மெஹ்பூபா படத்தின் சில பகுதிகளை பார்த்தேன். அதனுடன் ஒப்பிட்டால் மகேஷ் பாபுவின் போக்கிரி பிளாப். தனது மகன் மீது வைத்துள்ள அன்பால் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். இந்த படம் அருமையாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை பார்த்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு, போக்கிரி ஒன்றும் பிளாப் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


Director Ram Gopal Varma tweeted that, 'I just saw parts of purijagan ‘s Mehbooba and I strongly feel urstrulyMahesh ‘s Pokiri is a flop in comparison ..Could be becos of his love for his son that he made this film so fucking special ..Whatever reason it’s FUCKING looking EPIC

Recommended