சசிகலாவின் உத்தரவுப்படி மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

  • 6 years ago
சசிகலாவின் உத்தரவுப்படி மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. அப்போது சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்வதை குறைத்தது தமிழக அரசு.
மிடாஸ் நிறுவனம் வருமான வரி சோதனையில் சிக்கிய பின்னர் ஒட்டுமொத்தமாக கொள்முதலையே அரசு நிறுத்தியது. கடந்த சில மாதங்களாக மிடாஸ் மதுபான ஆலையின் வருமானம் மிக மோசமானது. இத்தகவல்களை சசிகலா, இளவரசியின் கவனத்துக்கு விவேக் கொண்டு சென்றிருந்தார். இதனிடையே தினரனின் தனிப்பாதையால் சசிகலா குடும்பம் அதிருப்தி அடைந்திருக்கிறது. இந்த அதிருப்தியானது அடுத்த கட்டமாக மீண்டும் அரசு மற்றும் அமைச்சர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் சசிகலா, இளவரசியை ஆளும் தரப்பில் இருந்து சிலர் சந்தித்தும் பேசியுள்ளனர். இந்த நல்லிணக்கத்தின் முதல் கட்டமாக மிடாஸில் இருந்து மீண்டும் மதுபான கொள்முதலை ஒப்புக் கொண்டிருக்கிறதாம் தமிழக அரசு. இதையெல்லாம் கேள்விப்பட்டுதான் தினகரன், இளவரசி குடும்பத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாராம்.


Sources said that TamilNadu Govt is resuming purchase from Midas distilleries which is owned by Sasikala Family.

Recommended