'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி!

  • 6 years ago
உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'நிமிர்'. பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுடன் நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திக்ரகனி, டைரக்டர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

'நிமிர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தைகூட பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லையாம். ஆனாலும், என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்திற்கு என்னை நாயகனாக்கியிருக்கிறார்.பயந்துகொண்டே முதல்நாள் ஷூட்டிங்குக்கு சென்றேன். அவர் திட்டினால்கூட சிரித்துக்கொண்டே திட்டினார். ஒரு குழந்தையிடம் வேலைவாங்குவது போன்று இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். அதோடு சினிமாத்தனம் இல்லாத ஒரு சினிமாவை எடுத்துள்ளார். அந்த அளவுக்கு யதார்த்தமான படம் இந்த 'நிமிர்'.
Udhayanidhi Stalin's 'Nimir' directed by Priyadarshan will be released on Jan 26. The audio launch ceremony of 'Nimir' was held yesterday evening in Chennai. Speaking at the function, Udhayanidhi said, "I would like to act even as a hero's friend role in Priyadharshan's film."

Recommended