2018 பட்ஜெட் ... அல்வா கொடுத்து இனிப்புடன் தொடங்கும் ஜெட்லீ

  • 6 years ago
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 1ஆம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் பணியை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது கையால் அல்வாவைக் கிண்டி தொடங்கி வைப்பார். நல்ல காரியம் செய்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க...

இது ஏதோ விளம்பர வாசகம் மட்டுமல்ல. பட்ஜெட் உரை பிரிண்ட் எடுக்கும் முன்பாக நிதியமைச்சக பணியாளர்கள் அல்வா சாப்பிட்டு விட்டுதான் பணிகளை தொடங்குகின்றனர். காரணம் தித்திப்புடன் பட்ஜெட் பணிகளில் ஈடுபட்டு அந்த ஆண்டை தித்திப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இனிப்புடன் இந்த பணி தொடங்கப்படுகிறதாம்.

மத்திய பட்ஜெட்டை அச்சடிப்பதற் காக ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பணியாளர்கள் விரும்பி சிறை வைக்கப்படுகிறார்கள். நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் மூன்றுகட்ட பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன

What’s halwa got to do with the Union Budget? It’s a food item alright but there’s more to it in the context of the presentation of the annual financial statement. Before the Finance minister of the country presents the budget to Parliament a lot of hard work goes on behind the locked doors of the Ministry of Finance in North Block. Here’s what you might have missed on the budget preparation process