எம்.ஜி.ஆர். போல் முதல்வர் ஆகிவிடுவேன் என்ற மிதப்பில் இருக்கும் தினகரன்!

  • 6 years ago
சசிகலா தம்மை டூப்ளிகேட் ஜெயலலிதாவாக உருமாற்றிக் கொண்டது போல தினகரன் தம்மை ஒரு எம்ஜிஆர் போல மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் என நினைத்துக் கொண்டு முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா குடும்பத்தினர் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க கோரி அக்கட்சியினர் போயஸ் கார்டனில் நாடகமாடிக் கொண்டிருந்த போது எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி நின்றிருந்தவர் தினகரன். அரசியலை விட்டே ஒதுங்கிப் போய் இருந்த தினகரன் அப்போதுதான் தலைகாட்டிக் கொண்டிருந்தார். சசிகலா சிறைக்குப் போன பின்னர் அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவி கொடுக்கப்பட்டதால் மீடியா வெளிச்சம் கிடைத்தது தினகரனுக்கு. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒதுங்கிக் கொள்ள ஆலமரம் கிடைக்காதா என ஏங்கிய அதிமுக தொண்டர்களுக்கு தீபாவின் வீடு நிழல் தந்தது.

பின்னர் ஓபிஎஸ்-ன் கிரீன்வேஸ் இல்லம் அடைக்கலம் கொடுத்தது. இந்த வரிசையில் தினகரனையும் அதிமுகவினர் ஆதரித்தனர்.

தினகரன் மேலூரிலும் திருச்சியிலும் கூட்டம் நடத்த சசிகலா குடும்பத்தினர் டெல்டா மாவட்டங்களில் இருந்து சொந்த பந்தங்களை இறக்கி மாஸ் காட்டினர். திவாகரன் மகன் ஜெயானந்தும் கூட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்

As Sasikala transforms Duplicate into Jayalalithaa, Dinakaran is said to be floating in the dream of thinking that he is a popular MGR leader. It is also reported that the Sasikala family is in deep discontent with Dinakaran.

Recommended