ஓடுபாதையில் இருந்து கீழே சறுக்கி கடலுக்கு அருகே சென்ற விமானம்
  • 6 years ago
துருக்கி நாட்டில் ஒரு விமானமானது, ரன் வேயில் சென்றபோது திடீரென சறுக்கி பள்ளத்தில் இறங்கி விட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த பயணிகள், ஊழியர்கள் தப்பினர். பள்ளத்திலிருந்து விழுந்திருந்தால் விமானம் கடலில் விழுந்திருக்கும். ஆனால் ரன்வேயிலிருந்து விலகி பள்ளத்தில் சறுக்கியதும் பாதியிலேயே நின்று விட்டது. இதனால் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக இல்லை.

போயிங் விமானமான அதில் 168 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர். அங்காராவிலிருநி்து கருங்கடலில் உள்ள டிரப்சான் தீவில் அது தரையிறங்கியது. கடலுக்கு அருகே பள்ளத்தை ஒட்டிய பகுதியில் ரன்வே உள்ளது. ரன்வேயில் விமானம் வந்தபோது திடீரென சறுக்கி பள்ளத்தில் சரிந்து விட்டது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். யாரும் காயம் அடையவும் இல்லை என்பது ஆச்சரியமானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

முன்னதாக விமானம் சரிந்ததும் பயணிகள் பீதியடைந்து அலறினர். விமானத்தின் மூக்குப் பகுதி மட்டும் பள்ளத்தில் சரிந்து புதைதந்து நின்று விட்டது. கீழே கடல், உள்ளுக்குள் அலறல் என பெரும் பீதியான சூழல்.அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட பின்னரே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

A plane skidded off runway in Turkey's Trabzon aiport and luckily all the passengers and crew escaped unhurt
Recommended