அஜீத்தை புகழ்ந்த ரவிக்குமார்- வீடியோ

  • 6 years ago
அஜீத் பற்றிய சுவராஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். பாலகிருஷ்ணா, நயன்தாராவை வைத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள தெலுங்கு படம் ஜெய் சிம்ஹா. படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. நயன்தாரா, பாலகிருஷ்ணா ஜோடியாக நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ஜெய் சிம்ஹா நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். ரவிக்குமார் பாலகிருஷ்ணா, அஜீத் குமார் ஆகியோருக்கு இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை குறித்து தெரிவித்துள்ளார்.
நான் இதுவரை பணியாற்றிய நடிகர்கள் தங்களின் ஸ்டார் அந்தஸ்திற்கு ஏற்றது போன்று வசனம் உள்ளிட்ட எதையாவது மாற்றச் சொல்லியுள்ளனர். நானும் அவ்வாறே செய்திருக்கிறேன். அதை நான் குறை சொல்ல மாட்டேன் என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
வசனத்தை மாற்றுங்கள், அதை மாற்றுங்கள் என்று இதுவரை என்னிடம் கேட்காதது இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டுமே. தெலுங்கு திரையுலகில் பாலகிருஷ்ணா, தமிழ் திரையுலகில் அஜீத் என்கிறார் ரவிக்குமார்.

Director K.S. Ravi Kumar said in Jai Simha function that Ajith from Kollywood and Balakrishna from Tollywood are the two actors who never requested him to change anything in the movie according to their star value.

Recommended