நாங்கள் லவ் ஜிகாதிகள் அல்ல...பா.ஜ.க.விற்கு ஜிக்னேஷ் கொடுத்த பதிலடி !- வீடியோ
  • 6 years ago
டெல்லியில் ஆளும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் எப்படியோ தெரியவில்லை, ஆனால் ஜிக்னேஷ் மேவானி பெரிய தலைவலியாக மாறியுள்ளார். குஜராத் சட்ட மன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெறும் முன்பே இவர் லைம் லைட்டிற்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று டெல்லியில் இவர் நடத்திய போராட்டம் பாஜக அரசை மீண்டும் ஒருமுறை உலுக்கி இருக்கிறது. டெல்லி அரசு இவரது போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்றாலும் இவர் தடையை மீறி போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் இவர் காதலர் தினம் குறித்து பேசினார். வாருங்கள் அனைவரும் காதலர் தினம் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டார்.

இந்த போராட்டத்தில் கன்ஹையா குமார், பிரசாந்த் பூஷன், உமர் காலித், ஷீலா ரஷித், அஜித் கோகாய் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். பீமா கோரிகான் கலவரத்தில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஆசாத்தை விடுதலை செய்யவேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பேசிய ஜிக்னேஷ், ''முஸ்லிம்கள் பலர் லவ் ஜிஹாத் என்று கூறப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். யாருமே லவ் ஜிஹாத் செய்யவில்லை. நாங்கள் லவ் ஜிஹாத் செய்யவில்லை. நாங்கள் காதலிக்கிறோம். காதலை எதிர்க்கும் பாஜக போன்றவர்களுக்கு எதிராக நாம் காதலர் தினத்தை கொண்டாட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

Jignesh Mevani leads protest in Delhi against the arrest of Chandira Sekar Azad. In the protest he said, We're pyaar ishq muhabbat guys. We are not love jihadis.
Recommended