தடைசெய்யப்பட்ட மருந்தை உட்கொண்ட விவகாரம்.... யூசுப் பதானுக்கு 3 மாதம் தடை- வீடியோ

  • 6 years ago
கிரிக்கெட் வீரர் யூசப் பதானை பிசிசிஐ 5 மாதங்கள் சஸ்பென்ட் செய்துள்ளது. தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்திய புகாரில் பிசிசிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியதாக அவர் மீது கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி டி20 போட்டியின் போது அவரது சீறுநீரை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.

இதில் அவர் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை ஊசி மூலம் எடுத்துக்கொண்டதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த யூசப் பதான் அந்த இருமல் மருந்து தடை செய்யப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றார்.

BCCI has suspended Yusuf pathan for five months in the doping violation. Pathan had taken cough syrup which is progibited.

Recommended