பலத்த காற்றுடன் மழை- வானிலை மையம் தகவல்- வீடியோ

  • 6 years ago
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
குளிர் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவில்லை. இன்னமும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் தொடக்கத்தில் மழை வெளுத்து வாங்கியது. நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தென் மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வழிகின்றன. தென் மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



Chennai met office predicted, Light rain is likely to occur at isolated places over South coastal Tamilnadu. Strong winds from northeasterly to easterly direction with speed reaching 45-55 kmph gusting to 65 kmph likely along -off Tamilnadu and Puducherry coast. Fishermen are advised to be cautious while venturing into sea off Tamilnadu.

Recommended