2017-ன் சிறந்த இயக்குனர் இவர் தான் !!- வீடியோ

  • 6 years ago

நம் வாசகர்களிடம் தமிழ் சினிமா 2017 பற்றி வெவ்வேறு பிரிவுகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். ஆயிரக் கணக்கான வாசகர்கள் வாக்களித்து ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வாசகர்களின் தேர்வுப்படி, 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறப்பாகப் பங்களித்தவர்கள் யார் எனும் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சிறந்த இயக்குநர் 2017 யார் எனும் பிரிவில் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இயக்குநர் ராஜமௌலி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்கள் கூட சோபிக்காமல் ஏமாற்றின. நிறைய புதுமுகங்கள் சிறப்பான படங்களைக் கொடுத்து ஆதிக்கம் செலுத்தினர். அறிமுக இயக்குநர்களுக்கென தனிப்பிரிவு சேர்க்கப்பட்டு, ஏற்கெனவே அறிமுகமான இயக்குநர்கள் மட்டும் இந்தப் பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

அதனடிப்படையில், பெரும் வரவேற்பைப் பெற்ற ஆறு படங்களின் இயக்குநர்கள் இந்தப் பட்டியலில் இருந்தனர். ராஜமௌலி, அட்லீ, ராம், மிஷ்கின், புஷ்கர் - காயத்ரி, ஹெச்.வினோத் ஆகியோர் இடம்பெற்ற இந்தப் பட்டியலில் இருந்து வாசகர்களின் தேர்வு அடிப்படையில் ராஜமௌலி முதலிடம் பெற்றிருக்கிறார்.

'பாகுபலி 2' மூலம் உலக அளவில் இந்தியப் படத்தின் வசூல் கொடியை நிலைநாட்டிய ராஜமௌலி 49% வாக்குகளைப் பெற்று 'சிறந்த இயக்குநர் 2017' ஆகத் தேர்வு செய்யப்படுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடித் தீர்த்த 'பாகுபலி 2' படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்.


We had a survey about Tamil cinema 2017 to our readers. Director SS Rajamouli has been ranked first in the category of best directors of Tamil cinema in 2017. Atlee holds the fourth place with 9% of votes.

Recommended