News Wallet | காலையில் நடந்தது என்ன.. ஒரு விறுவிறு பார்வை !!- வீடியோ

  • 6 years ago
1)நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/12-tamil-fishermen-from-rameshwaram-arrested-srilankan-navy-307340.html

2) திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-says-he-is-meeting-karunanidhi-wish-him-new-year-307324.html

3)பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வசதியாக இந்த ஆண்டு 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/pongal-special-buses-five-temporary-bus-stands-chennai-307342.html

4)மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு தண்டனை விவரம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/india/lalu-prasat-yadhav-will-be-sentenced-today-the-ranchi-cbi-court-in-fodder-scam-case-307229.html

5)மும்பை மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நள்ளிரவு 3-ஆவது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகிவிட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.கடந்த வாரம் மும்பை கமலா மில்ஸ் பகுதியில் நடைபெற்ற தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/two-children-among-4-were-died-fire-accident-mumbai-307346.html

6)எந்த வீரர்களை தக்க வைக்கவுள்ளது என்ற இறுதி பட்டியலை இன்று மாலை பிசிசிஐ.,யிடம் ஐபிஎல்., அறிவிக்கவிக்க வேண்டும். இதனால் இன்று மாலை இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும்.
ந்த ஆண்டுக்கான தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், வரும் ஜனவரி 27, 28ல் நடக்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்கவைக்கலாம், எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. தவிர, ரெய்னாவும் சென்னை அணி தக்கவைக்கும் விஷயம் உறுதியாகியுள்ளது.

https://tamil.oneindia.com/news/sports/cricket/team-are-ready-ipl-player-retention-2018-307351.html

Recommended