கிறிஸ்துமஸ் கேக்-உள்ளே நாணயம்..உங்களுக்கு கிடைத்தா?- வீடியோ

  • 6 years ago
இங்கிலாந்தில் நாட்டில் இந்த கேக்கானது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள அனைவரின் வீடுகளில் ப்ளம் கேக் செய்வார்களாம். செய்யும் போது,அனைவரின் முன்னிலையிலும் கேக் செய்வதற்குரிய் மாவைக் கொட்டி அவர்கள் அனைவரும் சேர்ந்து பிசைவர்.

அதன் பின்பு, அக்குடும்பத்தின் தலைவி ஒரு வெள்ளியிலான பென்னி நாணயத்தை ரகசியமாக அந்த மாவுடன் கலந்து விடுவார். இறுதியாக உருவாக்கப்பட்ட கேக் ஒரு மறைவிடத்தில் வைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் கேக்கை எடுத்து குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரிமாறுவர். உண்ணும்போது யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிக் காசு கிடைக்கிறதோ அவர் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு அனைத்துப் பரிசுகளும் அவருக்கே வழங்கப்படும்.

கிறிஸ்துமஸ் கேக்கினை பல விதங்களில் தயாரிக்கலாம் தற்போது உதகையில் 100 கிலோ கேக் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதில் பிராந்தி, விஸ்கி, ஒயின் போன்ற மதுபானங்களும், உலர் திராட்சை, பிஸ்தா, பாதாம், வால்நட்ஸ் மற்றும் பேரிச்சை போன்ற பொருட்கள் கலக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டது. இந்த விழாவில் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனராம்.

Christmas is no fun without the traditional Christmas cake. And making it is no quick and easy task preparations begin months in advance for that.

Recommended