தினகரன் முன்னிலை... கலக்கத்தில் அணி தாவிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்- வீடியோ

  • 6 years ago
இரட்டைஇலை சின்னத்தை பெற்றதால் எம்பிகள் நவநீதிகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமி அணிக்கு தாவினர். அணிதாவிய எம்பி, எம்எஏக்கள் ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் முன்னேறி வருவதைப் பார்த்து கலக்கத்தில் உள்ளனர். அதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த போது செல்வாக்கு படைத்தவராக வலம் வந்த டிடிவி. தினகரனை கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி. தினகரனை ஒதுக்கி வைக்க ஒதுக்கி வைக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நெருக்கம் அதிகரித்தது.

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு நடந்தது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தினகரன் கட்சி நிர்வாகிகளை மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிமுக விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்தை சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் வாங்கி வந்தது ஓ.பிஎஸ், ஈபிஎஸ் அணி.

MP, MLAs who shifted to CM Palanisamy camp is in oscillation of why moved here, as TTV. Dinakaran is moving towards the victory in Rk Nagar elections.

Recommended