அம்பயருக்கே பாடம்.. மீண்டும் கெத்து காட்டிய டோணி- வீடியோ

  • 6 years ago
இலங்கைக்கு எதிரான நேற்றைய 2வது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில், இலங்கை வீரர் அசேலா குணரத்னேவை ஸ்டெம்பிங் செய்த டோணி, நடுவர் அறிவிக்கும் முன்பாகவே அவுட் என 'அறிவித்தார்'. நடுவரைவிட துல்லியமாக அவுட் அல்லது அவுட் இல்லை என்பதை கணிப்பதில் டோணியின் திறமை மீண்டும் நேற்று நிரூபணமானது. இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலும் இப்படி ஒரு அசத்தல் ரிவ்யூ கேட்டு வைரலாகியிருந்தார் டோணி.

கோஹ்லி ஓய்வில் உள்ள நிலையில், ரோகித் ஷர்மா தலைமையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது இந்திய அணி. முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 38.2 ஓவர்களில், 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டானபோதிலும், டோணி மட்டும் நங்கூரம் பாய்ச்சி நின்று 65 ரன்கள் எடுத்தார்.

அப்போது எதிர்முனையில் பேட் செய்த பும்ராவுக்கு எல்பிடபிள்யூ கொடுக்க, கையை உயர்த்திக்கொண்டிருந்தபோதே, டோணி, டிஆர்எஸ் சோதனைக்கு பரிந்துரைக்குமாறு சொல்லிவிட்டார். நடுவர் முழுவதுமாக கையை தூக்கி முடிக்கும் சில வினாடிகளுக்குள் டோணி இது அவுட் இல்லை என கணித்து, டிஆர்எஸ் கேட்டார். டோணி கணித்ததை போலவே, டிவி ரிப்ளேயில் பார்த்த 3வது நடுவர், இது அவுட் இல்லை என தெரிவித்துவிட்டார்.




India's register victory over Sri Lanka by 88 runs in yesterday's 2nd T20 match. In this match, Dhoni, who stumped Sri Lankan player Asela Gunaratne, declared out before decision made by the umpire.

Recommended