மீண்டும் உலக சாதனை படைத்த தல தோனி- வீடியோ

  • 6 years ago
ஒருதினப் போட்டியில், 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் என்ற பெருமையைப் பெற்றுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, டி-20 போட்டியில் புதிய சாதனையைப் புரிந்துள்ளார். இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி-20 போட்டியில், பேட்டிங்கில் அசத்தியதுடன், 2 கேட்ச், 2 மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தார் தல டோணி. இதன் மூலம், டி-20 போட்டிகளில், அதிக விக்கெட்டை வீழ்த்த உதவிய விக்கெட் கீப்பரானார் டோணி. 47 கேட்ச்கள், 27 ஸ்டம்பிங் என, மொத்தம் 74 விக்கெட்களை வீழ்த்தியதில் உதவியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், 72 விக்கெட் வீழ்த்தியதில் உதவியுள்ளார். பீல்டராக 44 கேட்ச்களும், விக்கெட் கீப்பராக, 21 கேட்ச்கள், 7 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
கட்டாக் போட்டியின்போது, டி-20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னாவை முந்தி, மூன்றாவது இடத்தை டோணி பிடித்தார். அவுட்டாகாமல், 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த டோணி, 84 டி-20 போட்டிகளில், 1320 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம், 1307 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளினார்.


Dhoni creates new record in T-20

Recommended