கருத்து கணிப்புகளின் படி இல்லாமல் 99 சீட்டுகளுக்கே திணறும் பாஜக- வீடியோ

  • 6 years ago
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 111 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தெரிவித்தன. ஆனால் வெற்றியை உறுதியாக தீர்மானிக்க முடியாமல் 99 இடங்களில் வெற்றி பெறவே பாஜக ஊசலாடி வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதி இது தான் தேர்தல் நடந்து முடிந்த 14ம் தேதி மாலையில் தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக 104 முதல் 135 இடங்கள் வரை வெல்லும் என்று கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தன.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆன்லைன் சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வேயில் பாஜக 111 இடங்களிலும் காங்கிரஸ் 71 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதே போன்று டைம்ஸ் நவ் சேனல் மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய சர்வேயில் பாஜக 113 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறி இருந்தது.

ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய சர்வேயில் பாஜக 106 இடங்களையும் காங்கிரஸ் 75 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது.

Exit polls of various medias and the real polls of Gujarat People shows BJP is battling in the fort of BJP vigorously with congres to reach 100 + seats.

Recommended