தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை..பணப்பட்டுவாடாவினால் தேர்தல் ரத்தா..வீடியோ

  • 6 years ago
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், தேர்தல் அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் நடக்குமா என்கிற கேள்வி எழுந்து உள்ளது. ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும் இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளதாக, தி.மு.க சார்பில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க மற்றும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று பணப்பட்டுவாடா புகார் அளிப்பதற்காக கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பலரும் குவிந்ததால், அங்கு அதிக எண்ணிகையில் புகார் பதிவாகி உள்ளது.


Recommended