பூமியை போன்ற கோள்களை உடைய மேலும் ஒரு சூரிய குடும்பத்தை நாசா கண்டுபிடிப்பு- வீடியோ

  • 6 years ago
பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக்குடும்பம் இருப்பதை நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

மக்களின் நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிக்கொண்டே வருகிறது. பூமியில் அரிய கண்டுபிடிப்புகளை அரங்கேற்றிய மனிதன் அண்டவெளியிலும் தனது ஆய்வை தொடங்கிவிட்டான்.

அதன் ஒருபகுதியாக மற்றொரு பூமி உள்ளதா வேற்றுக்கிரக வாசிகள் உள்ளனரா என்ற ஆய்வுகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா மேற்கொண்டு வருகிறது. அண்மையில் பூமியை போன்ற பல கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்தது நாசா.

இந்நிலையில் பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பதை நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. நாசா மற்றும் கூகுளின் கெப்ளர் - 90 தொலைநோக்கி இந்த புதிய சூரியக்குடும்பத்தை கண்டுபிடித்துள்ளது.

Nasa and Google kepler telescope found new orbit with 9 planets. Like Earth, the new planet is the third rock from its sun but can orbit it in just 14 days.

Recommended