ரஜினி ரசிகர்கள் சந்திப்பின் போது புதிய கட்சி தொடங்குவாரா?- வீடியோ

  • 6 years ago
இந்த மாத இறுதியில் ரசிகர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தவுள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடையே பேசிய ரஜினி, ஆண்டவன் கட்டளைபடி இன்று நடிகனாக இருக்கிறேன். நாளை நான் என்னவாக ஆக வேண்டும் என்று ஆண்டவன் ஆசைப்படுகிறானோ அதன்படி நான் நடப்பேன் என்றார். மேலும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து ரஜினி அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்று தெரியவந்ததை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழருவி மணியன் தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் ரஜினி அரசியலுக்கு வருவது ஏன் என்பது குறித்தும் அவர் ஏன் வரவேண்டும் என்பது குறித்தும் தமிழருவிமணியன் விளக்கிப் பேசினார். இது ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது.

இதனிடையே தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று ரஜினிக்கு அடுத்தாற்போல் கூறிய கமலோ அதிகளவில் அரசியலில் ஈடுபடுகிறார். ஆனால் ரஜினியோ ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியோடு சரி என்றெல்லாம் பேசினர். இது காலா மற்றும் 2.0 படங்களை பிரபலப்படுத்த ரஜினி பயன்படுத்தும் விளம்பர யுத்தி என்றும் கூறினர்.

ஆனால் உண்மையை சொல்லபோனால் கட்சி சின்னம், கொடி, பெயர் தேர்வு, கட்சியை பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில் ரஜினி மும்முரம் காட்டி தற்போது அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இந்த மாதம் 12-ஆம் தேதி ரஜின பிறந்தநாள் அன்று அறிவிப்பு வரும் என்றும் யூகங்கள் வந்தன.


Rajinikanth announces his political entry in this fans club meeting which is going to be held in Dec 26 to Dec 31

Recommended