ராஜஸ்தானில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்த திருடன் நாதுராம்- வீடியோ

  • 6 years ago
தமிழ்நாட்டில் கொள்ளையடித்துச்சென்ற பணத்தை சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குக் கொண்டு சென்று ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளான் நாதுராம். அவனது பங்களா, வாழ்க்கை முறை திருடுவதற்கு திட்டம் போடுவது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று தனது நகைக்கடை, அடகுக்கடையை பூட்டிவிட்டு மதியம் சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்து விட்டு வரலாம் என்று வீட்டுக் சென்றார் முகேஷ்குமார். கொளத்தூர் புதிய லட்சுமிபுரம், ரெட்டேரி கடப்பா சாலையில் உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் மகாலட்சுமி ஜூவல்லரி மற்றும் அடகு கடை உள்ளது.

வழக்கம் போல மாலை 4 மணிக்கு கடையை திறந்து பார்த்த போது கடையில் இருந்த 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த முகேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் கடையில் மேல் தளத்தில் ஓட்டை போட்டு கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

கொள்ளை நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் இரண்டு வட இந்தியர்கள் ஜவுளிக்கடை நடத்த வாடகைக்கு பிடித்தனர். நகை கொள்ளை நடந்த அன்று மேல்தளத்தில் இருந்த கடை பூட்டப்பட்டிருந்தது. நகைக்கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் நகைக்கடையின் மேல் தளத்தில் தங்கி இருந்த 2 பேரும் நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்களின் புகைப்படத்தை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.


Bandit Nathuram looted the jewels in Tamil Nadu and lead a sophisticated life in his state Rajajasthan.

Recommended