ராயபுரத்தில் அதிகமாக குக்கர் இறக்குமதி செய்த கடையில் ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை- வீடியோ

  • 6 years ago
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு குக்கர் கடையில் டோக்கன் மூலம் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பார்வையாளர்களுடன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியது. இதையடுத்து தினகரனும், மதுசூதனனும் சுயேச்சையாக தொப்பி மற்றும் இரட்டை விளக்கு சின்னங்களில் களத்தில் இருந்தனர். தனக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை தினகரன் பிரபலப்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டார்.

இதனிடையே பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அப்போது அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து விட்டன. இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிட்டது. ஆனால் தினகரனோ தனக்கென ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் ஜெயலலிதா இல்லாமல் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக களம் இறங்குகிறது

It officials raids in Royapuram's cooker shop. As they got complaint that the shop issues cooker to the voters who have token.

Recommended