ராமர் பாலம் இல்லை என திமுக தான் சொன்னது-காங்கிரஸ்- வீடியோ

  • 6 years ago
ராமர் பாலம் இல்லை என காங்கிரஸ் கூறியதற்கு காரணம், திமுகதான் என்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை நடுவே ராமேஸ்வரம் கடல் பகுதியில், புராண காலத்தில் ராமரின் வானர படைகளால் பாலம் கட்டப்பட்டது என்று ராமாயண இதிகாசத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது.

இருப்பினும், இதற்கான வரலாற்று ஆதாரம் குறித்த சர்ச்சைகளும் நடந்து வந்தன. ஆனால் அமெரிக்க டிவி சேனல் ஒன்று ராமர் பாலம் என்று அழைக்கப்படும் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பாலம் இருப்பது உண்மை என கூறியுள்ளது.அமெரிக்க அறிவியல் நிபுணர்களின் ஆராய்ச்சி விவரத்தை அந்த நாட்டின் பிரபல சயின்ஸ் சேனல் முன்னோட்ட வீடியோவாக வெளியிட்டது. அதில், இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், சுப்ரீம் கோர்ட்டில், ராம் சேது குறித்த வழக்கில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தியா-இலங்கை நடுவே பாலம் எதுவும் இல்லை. மணல் திட்டுதான் உள்ளது என்று கூறியிருந்தது. அதை சுட்டிக்காட்டி பாஜக அமைச்சர்கள் காங்கிரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.பாஜக மூத்த தலைவரும், ரயில்வே அமைச்சருமான, பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரசின் ராமர் சேது குறித்த நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ராமரை கடவுள் என பாஜகவினர் நம்புகிறோம். ராமர் பாலம் மதிக்கப்பட வேண்டும். அதில் பல கோடி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை சேதப்படுத்தி விடக்கூடாது என்றார்.

The latest disclosure on the Ram sethu, by the Science Channel has put the Congress party in the dock

Recommended