கல்யாண நாளில் டபுள் செஞ்சுரி அடித்த ரோஹித் சர்மா....வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 208 ரன்கள் அடித்தார். இந்த இரட்டை சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனைகள் படைத்து இருக்கிறார். அவருக்கு இணையம் முழுக்க வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. மேலும் இன்று அவருக்கு திருமண நாள் என்பதால் அதற்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் இந்தியா பட்ட அவமானத்திற்கு இதன் மூலம் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது

ரோஹித் சர்மா இதற்கு முன்பே இரட்டை சதம் அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 209 ரன்கள் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் தொடரில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர் மட்டும்தான்.
இன்று ரோஹித் சர்மாவின் திருமண நாள் ஆகும். இந்த போட்டியை காண்பதற்காக ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே வந்திருந்தார். ரோஹித் ஒவ்வொரு ரன்களாக அடிக்கும் போதும் அதிக பதட்டம் அடைந்தது இவர்தான்.

Rohith Sharma hits his 3rd ODI double century. He hits 208 runs in 153 balls against Sri Lanka in 2nd ODI. He is the only batsman to attain this record score.

Recommended