வளர்ச்சின்னா இது தான் வளர்ச்சி பாருங்க மக்களே...வீடியோ

  • 6 years ago

குஜராத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவையொட்டி அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலை வழி பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் கடல்வழி விமான பயணத்தை இன்று மேற்கொண்டார்.

குஜராத் சட்டசபைக்கான தேர்தல் நாளை மறுதினம் இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சாலை வழியாக பேரணி, பிரச்சாரம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலேயே முதன்முறையான கடல் வழியிலான விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார். விமான ஓடுதளம்இன்றி தண்ணீரில் இருந்தே புறப்பட்டு தண்ணீரிலேயே தரையிரங்கலாம் என்பதே இதன் சிறப்பு.

PM Narendra Modi flies Seaplane first time ever after the road rally permission denied by Ahmedabad district administration which also predicts the development of gujarat

Recommended