சுழன்றபடி மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த ஓகி..வீடியோ

  • 6 years ago
மும்பை ஓகி புயல் மும்பை - குஜராத் இடையே கரையை கடந்த போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது. அண்மையில் வங்கக்கடலில் உருவானது ஓகி புயல். கடந்த 30ஆம் தேதி காலை கன்னியாகுமரியை நெருங்கியது. கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த இந்தப் புயல் கரையை கடக்காமலே கோர தாண்டவம் ஆடியது.

இந்த ஓகி புயல் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேராள ஆகிய மாநிலங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. ஓகி புயலால் கொட்டிய மழையால் தென் தமிழகம் வெள்ளக்காடானது.
தெற்கு கேரளாவையும் வச்சு செய்த இந்த புயல் லட்சதீவையும் பதம்பார்த்தது. பின்னர் கடலிலேயே ட்ராவல் செய்த இந்த புயல் கடந்த 5ஆம் தேதி குஜராத் மும்பை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது.



Nasa released natural-color image of the tropical cyclone Ockhi approaching India. Ockhi cyclone formed in bay of bengal and hits Tamilnadu, Kerala, Lakshdeep and Gujart.

Recommended