தெய்வமகள் சத்யா, ரேகா பற்றி ஒரு உண்மை தெரியுமா?..வீடியோ

  • 6 years ago
தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் எனக்கும் ரேகா கதாபாத்திரத்திற்கும் ஆகாது. ஆனால் நிஜத்தில் நாங்கள் சகோதரிகள் போன்று என்கிறார் தெய்வமகள் சத்யா. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் சத்யாவாக நடிப்பதன் மூலம் பிரபலமாகியுள்ளவர் வாணி போஜன். சுமார் 4 ஆண்டுகளாக அந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து சத்யா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாள் தயாரிப்பு குழு என்னை அழைத்து சேலை கட்டி வந்து வசனம் பேசுமாறு கூறியது. பேசினேன் தேர்வு செய்துவிட்டார்கள். அதில் இருந்து தெய்வமகள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் இதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும் தெய்வமகள் தான் எனக்கு தமிழ்நாட்டில் பெயர் வாங்கிக் கொடுத்தது. 1400 எபிசோட் முடிந்துவிட்டது. 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.
தெய்வமகள் தொடர் ஹிட்டாகும் என தெரியும். ஆனால் சூப்பர் ஹிட்டாகும் என தெரியாது. இதில் நடித்து வரும் அனைவரும் ஒரு குடும்பம் போன்று ஆகிவிட்டோம். தொடரில் எனக்கும் ரேகா கதாபாத்திரத்திற்கும் ஆகாது. ஆனால் நிஜத்தில் நாங்கள் சகோதரிகள் போன்று. தமிழக மக்கள் என்னை இந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.


Deivamagal TV serial fame Vani Bhojan said that though Rekha and Sathya characters don't get along in the serial, they are like sisters on the set. Vani Bhojan is popular among the people of Tamil Nadu as Sathya.

Recommended