100 பெண்களை பலாத்காரம் செய்த ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு 60 ஆண்டு சிறை-அமெரிக்க கோர்ட் தீர்ப்பு- வீடியோ

  • 6 years ago
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் உட்பட 100 பெண்களை பலாத்காரம் செய்த டாக்டருக்கு 60 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து மிச்சிகன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கவில் ஒலிம்பிக் அணியில் இருக்கும் லார்ரி நாசர்,54 அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். சிறுமிகளை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்ததாகவும் இந்த டாக்டர் மீது புகார் உள்ளது. டாக்டர் லார்ரி நாசருக்கு 3 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஒரு வழக்கிற்கு 20 ஆண்டுகள் வீதம் வழக்கிற்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஜிம்னாஸ்டிக் கடினமான விளையாட்டு என்பதால் இந்த விளையாட்டில் தகுதி பெற வேண்டுமானால் ஒலிம்பிக் விதிகளின் படி உடல் திறனில் தேர்ச்சி பெற வேண்டும். ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களுக்கு தனி மருத்துவர்களை நியமித்து உடல் தகுதி சோதனைகளை ஆய்வு செய்து ஒலிம்பிக் சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் பிரிவு மருத்துவராகநியமிக்கப்பட்ட லார்ரி நாசர் தன்னிடம் உடல் பரிசோதனைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

டாக்டரின் செயல் பல இளம் வீராங்கனைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால் ஓலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமே என்று அமைதி காத்தனர் பல இளம் சிறுமிகள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் தவித்தனர். ஆனால் தைரியமாக முன் வந்தார் மெகய்லா மரோனி.

Dr. Lawrence G. Nassar, a former team doctor for U.S.A. Gymnastics who has pleaded guilty to sexually abusing gymnasts under the guise of medical treatment, was sentenced on Thursday to 60 years in prison on child pornography charges.

Recommended