இத்தாலி பறந்தார் மிஸ் அனுஷ்கா... திரும்பி வரும் போது மிஸஸ் கோஹ்லியாக வருவாரா?- வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் அடுத்த வாரத்தில் இத்தாலியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரும் குடும்பம் சகிதமாக இத்தாலி பறந்துள்ளனர். இந்தியாவின் பேவரிட் செலப்ரிட்டி ஜோடிகள் என்றால் அதில் முதலிடம் பிடிப்பது விராட் கோஹ்லியும் அனுஷ்கா ஷர்மாவும் தான். இருவரும் சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வருவதாக மீடியாக்களில் பரவலாக செய்திகள் வலம் வந்தன. அண்மையில் இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்திருந்ததிலும் லவ் கெமிஸ்ட்ரி கொப்பளித்திருந்தது. இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோஹ்லியும் இத்தாலியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் ஒரு தகவல் பரவியது. டிசம்பர் 10 மற்றும் 12 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இவர்களின் திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மும்பையில் இந்த மாதக் கடைசியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் உலவின.

ஆனால் இந்த தகவலை அனுஷ்கா ஷர்மா மறுத்திருந்தார். விடுமுறை கொண்டாட்டத்திற்காகவே இத்தாலி செல்வதாகவும் அவர் கூறி இருந்தார். ஆனால் அனுஷ்காவின் பதிலால் அவரது ரசிகர்கள் யாரும் சமாதானம் அடையவில்லை.





Actress Anushka Sharma with her family boarded to Italy from Mumbai airport yesterday night like the same Indian Cricket captain virat Kohli also flied to Italy from Delhi airport, will it be for Viruksha wedding.

Recommended