க்ரீன் சிக்னல் காட்டிய டெல்லி.. அடுத்தது கோட்டைக்குள் ஆய்வு நடத்தப் போகிறார் ஆளுநர்?- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு குடைச்சல் கொடுக்க டெல்லி க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது ஆய்வுகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளாராம். அனேகமாக அடுத்த ஆய்வு தலைமைச் செயலகத்திலும் நடைபெறலாமாம்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்படும் பொழுதே எப்படியெல்லாம் இங்கே குடைச்சல கொடுக்க வேண்டும் என ப்ளான் செய்தது டெல்லி. இதற்கேற்பத்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களே இல்லை என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் எதிர்க்கட்சிகளும் ஆளுநரும் இதைப் பற்றி கவலைப்படவே இல்லை.அரசியல் நகர்வுகளை விட்டுவிட்டு ஆட்சி அதிகாரத்தை டெல்லி, ஆளுநர் மூலமாக நேரடியாகவே கையிலெடுத்து விட்டது. கோட்டையிலும் ஆளுநர் மாளிகையிலும் டெல்லியின் விசுவாச அதிகாரிகள் முக்கிய பொறுப்புகள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

DMK Working President M.K. Stalin said the party will hold peaceful protests against Tamil Nadu Governor Banwarilal Purohit in districts where he goes for review of development works.

Recommended