நெஞ்சில் நீங்க இடம் பிடித்த சோ...நினைவு தினம் இன்று...வீடியோ

  • 6 years ago
தன் கருத்தை எதற்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும் துணிச்சல், வலுவான வாதங்கள், எள்ளல் கலந்த எழுத்துக்கள் பிரபல பத்திரிக்கை ஆசிரியரும் நடிகருமான சோ ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று...

சென்னை மயிலாப்பூரில் அக்டோபர் 5ஆம் தேதி 1934 ஆம் ஆண்டு பிறந்த சோ ராமசாமி தனது பள்ளி படிப்பை மயிலை பி .எஸ் உயர்நிலை பள்ளியில் படித்தார்

பின் சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற சோ 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார்

தனது 20 வயதில் நாடகத்தில் ஆர்வம் பிறந்து . முதன்முதலாக கல்யாணி என்ற நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் தேன்மொழியாள் என்ற நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

பின்னர் நாடகங்களை எழுதிஇயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு முகமது பின் துக்ளக் சரஸ்வதி சபதம் உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1500 தடவைக்குமேல் மேடையேறின.

நாடகத்தில் நடித்த கையோடு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் சோவின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்

துக்ளக் வார இதழை 1970-ம் ஆண்டும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கி 37 ஆண்டுகளாக நடத்திய பெருமையும் அவரையே சேரும் அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளதுஎன்று பெருமையுடன் கூறுவார் சோ அவரின் நட்புக்கு உரியவராக இறுதி வரை இருந்தவர் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா .

ஜெயலலிதாவிற்கு நல்ல நண்பராக நம்பிக்கைக்குரிய நபராக இருந்த சோ ஜெயலலிதா மறைந்த இரண்டாவது நாள் சோவும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

Des : Strong arguments, strong arguments, molestation letters, celebrity magazine editor and actor So Ramasamy's first year anniversary today

Recommended