ஐசிசி போட்டிகளுக்கு நோ... ஐபிஎல் போட்டியும் நடக்காது... டெல்லி புகை எதிரொலி!- வீடியோ

  • 6 years ago
டெல்லி மைதானத்தில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. டெல்லியில் நிலவும் மோசமான புகை இதற்கு காரணமாக சொல்லப்பட்டு இருக்கிறது. குறைந்த பட்சம் 2020 வரையாவது போட்டிகள் நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி நிறைய கிரிக்கெட் போட்டிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது. டெல்லியில் நடந்து வரும் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டி பல முறை புகையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த புகை பிரச்சனை பெரிய அளவில் வைரல் ஆனது. வீரர்கள் வாந்தி எடுப்பதும், மாஸ்க் மாட்டி சுற்றுவதும் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில் தற்போது டெல்லி புகை மீது பலர் குற்றம்சாட்டி உள்ளனர். இனி குளிர்காலத்தில் டெல்லியில் விளையாட்டு போட்டிகள் நடத்த கூடாது என்று கோரிக்கை எழும்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது. பள்ளிகளுக்கே விடுமுறை இருக்கும் போது யார் அனுமதியோடு கிரிக்கெட் நடத்தினீர்கள் என்று கேட்டது. மேலும் மருத்துவர்கள் சில வீரர்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.

Third test match between India vs Sri lanka held today in Delhi. Delhi pollution disturbs players and camera. Now Delhi will lose cricket matches because of smog. It will lose the IPL matches too.

Recommended