விரட்ட துடிக்கும் அரசியல்வாதிகள்... ஆர்.கே. நகரில் பால பாடம் கற்றுக்கொள்வாரா விஷால்- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால் தனது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வைக்கவே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. தமிழக அரசியலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, டி.ராஜேந்தர், பாக்யராஜ், ராமராஜன், சரத்குமார்,விஜயகாந்த், சீமான் என பலரும் நடிகராக இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர்களே. இவர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா மட்டுமே முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர்கள். எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். மற்றபடி பாக்யராஜ், ராமராஜன், டி.ராஜேந்தர், சரத்குமார், சீமான் எல்லாம் இன்னமும் அரசியல் பாடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் ரஜினி, கமல், விஜய், விஷால் என பல நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றனர். இதில் பலருக்கும் முதல்வர் நாற்காலி கனவு இருக்கிறது.
பெரிய நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் விஷால் நேரடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிவிட்டார். தனக்கு பின்னால் யாரும் இல்லை என்று கூறினாலும், ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவார்கள்.

Vishal has filed his nomination in RK Nagar and will he learn something from there?

Recommended