உபி உள்ளாட்சி தேர்தல்: ஆதித்யநாத்தின் கோரக்பூரை இழந்த பாஜக..

  • 6 years ago
உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை ஆளும் பாஜக கைப்பற்றியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, உ.பி.யில் கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், உ.பி.யில் 652 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. இதன் முடிவுகள் நேற்றிரவு வெளியானது
அதன்படி பாஜக போட்டியிட்ட 16 மேயர் பதவிக்கான இடங்களில் 14 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

The ruling Bharatiya Janata Party won 14 of the 16 mayoral seats in Uttar Pradesh where the civic bodies polls were held in three phases. BJP lost in the CM Yogi Adhithyanath's Gorakpur and congres lost the Amethi.

Recommended