சர்வதேச நீதிமன்றத்தில் தற்கொலை செய்த ப்ரால்ஜக்.. விஷம் கொண்டுவந்தது எப்படி?

  • 7 years ago
போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் நீதிமன்றம் அவரை போர் குற்றவாளி என்று அறிவித்தது. இதனால் மனம்முடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் அவரின் தற்கொலை காரணமாக 6 பேர் தேவையில்லாமல் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போஸ்னியா நாட்டில் 1992 - 95ம் ஆண்டுகளில் உள்நாட்டு போர் நடந்தது. அப்போது குறிப்பிட்ட இன மக்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப்பட்டனர். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக போஸ்னியா நாட்டின் ராணுவத் தளபதியான 'ஸ்லோபோதன் ப்ரால்ஜக்' உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது, விசாரணையின் முடிவில் ராணுவத் தளபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆறு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை கேட்டு ஸ்லோபோதன் மனமுடைந்து போனார். உடனடியாக தன் பாக்கெட்டில் இருந்து கண்ணாடி பாட்டிலை எடுத்தார். அதில் இருந்த கருப்பு நிற திரவத்தை குடித்தார். மேலும் நீதிபதியிடம் நான் குற்றவாளி இல்லை என்றார். விஷம் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிபதி நீதிமன்றத்தை ஒத்திவைத்தார். போலீசார் உதவியுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

Recommended