எதிர்ப்புகளை சரிகட்டி மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு...வீடியோ

  • 6 years ago
அதிமுகவின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் இந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூததன் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதற்கு முதல்வர் பழனிசாமி தரப்பில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விருப்ப மனு அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது வரை மதுசூதனன், கோகுல இந்திரா, பாலகங்கா உள்ளிட்டோர் இந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிகிறது. மொத்தம் 27 பேர் விருப்பமனுக்களை அளித்திருந்த நிலையில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூடி ஆலோசித்தது.ஆட்சி மன்றக் குழுவில் ஏற்கனவே உள்ள 7 பேருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி உள்ளிடோர் ஆட்சி மன்றக் குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வளர்மதி, அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசைக்குப் பிறகு அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி மதுசூதனனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆர்கே நகர் தொகுதியில் மதுசூதனன், தினகரன், மருதுகணேஷ் உள்ளிட்டோருக்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக இரு அணிகளாக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியை ஆதரித்த மதுசூதனன், அதிமுகவின் அவைத்தலைவராக 2 வது முறையாக தொடர்ச்சியாக இருந்து வருகிறார். 1991ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அரசில் கைத்தறித்துறை அமைச்சராகவும் மதுசூதனன் இருந்துள்ளார்.

ADMK meeting starts at party headquarters to decide the candidate for RK nagar by polls as 27 files wish to contest in the by election.

Recommended