காஷ்மீர் சென்ற தோனிக்கு பகிரங்கமாக அவமரியாதை! ஷாக்கிங் வீடியோ

  • 6 years ago
காஷ்மீரில் இந்திய கிரிக்கெட் வீரர் டோணிக்கு அவமரியாதை அளிக்கும் செயல் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் தற்போது ஓய்வில் உள்ளார். டோணிக்கு ராணுவ கவுர லெப்டினண்ட் ஜெனரல் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டோணி, கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

காஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற டோணி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது காஷ்மீரிலுள்ள ராணுவத்தினருக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இதேபோல காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குன்சார் பகுதியில் ராணுவம் நடத்திய கிரிக்கெட் போட்டி ஒன்றில் டோணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிரிக்கெட் போட்டியை காண டோணி வருகை தந்த போது, மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்

அப்ரிடிக்கான அடை மொழி பூம்பூம் என்பதாகும். டோணி வருகையின்போது அவருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக, "பூம்பூம் அப்ரிடி" என மைதானத்தில் இருந்தவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினர். இதை கவனித்த பாதுகாப்பு படையினர், அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை கட்டுப்படுத்த முயன்றபோதும் முடியவில்லை


Locals chanted 'Boom Boom Afridi' slogans as Former India Skipper Mahendra Singh Dhoni, on Sunday visited Kunzar area of Baramulla District in Kashmir.

Recommended