இருட்டு அறையில் முரட்டுக் குத்து இயக்குனருடன் கைகோர்த்துள்ள ஆர்யா- வீடியோ
  • 6 years ago
அடல்ட் காமெடி படங்களாக எடுத்து வரும் இயக்குனர் சந்தோஷுடன் கை கோர்த்துள்ளார் ஆர்யா. கவுதம் கார்த்திக்கை வைத்து ஹர ஹர மகாதேவகி எனும் அடல்ட் காமெடி படத்தை எடுத்து வெற்றி பெற்றார் இயக்குனர் சந்தோஷ். இதையடுத்து மீண்டும் கவுதம் கார்த்திக்கை ஹீரோவாக்கி இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் சந்தோஷ். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை அடுத்து சந்தோஷ் ஆர்யாவை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹர ஹர மகாதேவகி படத்தை தயாரித்து வெற்றி கண்ட ஞானவேல் ராஜா மீண்டும் சந்தோஷுடன் கை கோர்த்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை தயாரித்து வருகிறார். அடல்ட் காமெடி படமாக எடுத்து வெற்றி காண ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சந்தோஷுடன் சேர்ந்துள்ளார் அவர். தொடர் தோல்விகளால் கவலையில் உள்ள ஆர்யா சந்தோஷ் இணையும் படமும் அடல்ட் காமெடியாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் ஆர்யாவுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Arya is set to act in a movie to be directed by Santhosh P Jayakumar whose recent flick Hara Hara Mahadevaki was a hit. Arya's upcoming movie will be produced by StudioGreen. Vanamagan fame Sayeesha will share screen space with Arya.
Recommended